இஸ்லாம்

எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். PhotobucketPhotobucket

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

பேரித்தம் பழத்தால் நோன்பு திறப்பது சிறந்தது

* நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வதற்கு முன், கனிந்த பேரித்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அது இல்லையென்றால் சாதாரண சில   பேரித்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அதுவும் இல்லையென்றால் சில மிடர் தண்ணீர் குடித்துக் கொள்வார்கள். (ஆதாரம்: திர்மிதி)
* உங்களில் ஒருவர் நோன்பு திறந்தால் பேரித்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறக்கட்டும், அது கிடைக்கவில்லையென்றால் தண்ணீரைக் கொண்டு நோன்பு     திறக்கட்டும்  என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி, அபுதாவுத்)

விளக்கம்: கனிந்த பேரித்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பது சிறந்ததாகும். அது இல்லையென்றால் சாதாரண பேரித்தம் பழம் அதுவும்  கிடைக்கவில்லையென்றால் சில மிடர் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும். நன்றி தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக