இஸ்லாம்

எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். PhotobucketPhotobucket

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

நோன்பாளி குளிப்பதில் தவறில்லை


* நபி (ஸல்) அவர்கள் (உடலுறவின் காரணமாக) முழுக்கான நிலையில் பஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என   ஆயிஷா  (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

* நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டிருக்கும் போது வெப்பம் அல்லது தாகத்தின் காரணமாக தன் தலைமீது தண்ணீரை ஊற்றியதாக சில   நபித்தோழர்கள்  மூலமாக அபுபக்கர் இப்னு அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், முஅத்தா, அபுதாவுத்)

* அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது ஈரத்துணியை தன்மீது போடுவார்கள். (ஆதாரம்: புகாரி)

விளக்கம்: தேவைப்படும் போது, நோன்பாளி பகல் நேரத்தில் குளித்துக் கொள்வதில் தவறில்லை. புகாரி (ரஹ்) அவர்கள், தன் புகாரி கிரந்தத்திலே நோன்பாளி குளிக்கும்  பாடம் என தலைப்பிட்டு மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களைக் கூறியிருக்கின்றார்கள். நன்றி தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக