| | |
| இந்திய உச்சநீதிமன்றம் |
இந்தியாவின் அயோத்தியில் உள்ள தகராற்றுக்குரிய மத-ஸ்தலத்தின் எதிர்காலம் தொடர்பில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்புக்கு இந்திய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்துக்களும் முஸ்லிம்களும் உரிமை கோரும் இந்த நிலத்தை மூன்றாகப் பங்கிட்டு, பகிர்ந்து அளிக்க வேண்டும் என சென்ற வருடம் அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து இந்துக்கள் தரப்பு முஸ்லிம்கள் தரப்பு என்று இருசாராருமே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
அந்த மேல்முறையீட்டில் விசாரணைகளை திங்களன்று ஆரம்பித்திருந்த உச்சநீதிமன்றம், உரிமை கோரப்படும் அந்த நிலத்தைப் பங்கிட உயர்நீதிமன்றம் உத்தவிட்டமை விநோதமான ஒரு தீர்ப்பு, ஏனென்றால், நிலத்துக்கு உரிமை கோரி வழக்கு தொடுத்த எந்தத் தரப்புமே அப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த இடத்தில் நின்றிருந்த 16ஆம் நூற்றாண்டுப் பள்ளிவாசல் ஒன்றை 1992ல் இந்து கடும்போக்காளர்கள் இடித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் பல இடங்களில் மோசமான மதக் கலவரங்கள் வெடித்திருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக