இஸ்லாம்

எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். PhotobucketPhotobucket

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி


அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்…..நம்குழந்தைகளைத் தொழ ஆர்வமூட்ட வேண்டியது நமது கடமை என்பதிலும் , அதைச் செய்யாத பட்சத்தில் அல்லாஹ்விடம் அதற்காக பதில் கூற வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. குழந்தைகளிடம் தொழுகையை ஆர்வமூட்டும் போது அவர்களுக்கு பிடித்த மாதிரி அவர்களுடைய மனநிலைக்கு ஏற்றவாறு செய்ய வேண்டும்.

இவற்றை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதே “ MY PRAYER TREE” நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள “MY PRAYER TREE” ஐ பிரதி எடுத்து குழந்தையிடம் கொடுத்து வீட்டின் முக்கிய பகுதியில் ஒட்டச் சொல்லவும். ( மாதம் ஒரு பிரதி)

2)பச்சை , மஞ்சள் , சிகப்பு நிற கலர் பென்சில்களை வாங்கிக் கொடுக்கவும்.

3)அதில் குறிப்பிட்டுள்ள 1,2,3,…..31 மாதத்தின் நாட்களைக் குறிக்கும். ஒவ்வொரு நாளிளும் 5 நேரத் தொழுகையைக் குறிக்க 5 இலைகள் உள்ளன.

4)குறிப்பிட்டுள்ளபடி, ஜமாத்துடன் தொழும் தொழுகையை பச்சை நிறத்திலும், ஜமாத்தில்லாமல் ஆனால் குறித்த நேரத்தில் தொழும் தொழுகையை மஞ்சள் நிறத்திலும், நேரம் தவறிய தொழுகையை சிகப்பு நிறத்திலும் ( அதற்கான இலையை) வண்ணமிட வேண்டும்.

5) மாதத்தின் இறுதியில் வண்ண இலைகளுக்கு மதிப்பெண் வழங்கி , மதிப்பெண்ணிற்கு ஏற்ப பரிசு வழங்கவும்.

6)இன்ஷா அல்லாஹ் சில மாதங்களில் உங்கள் குழந்தை நியமமாக தொழக் கூடியவர்களாக ஆகி விடுவர். நீங்களும் உங்கள் பொறுப்பை நிறைவேற்றிய நிம்மதியை அடைவீர்கள். நன்றி தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக