இஸ்லாம்

எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். PhotobucketPhotobucket

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

தாழ்த்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இட-ஒதுக்கீடு

தாழ்த்தப்பட்ட முஸ்லிம்களுக்கு என தனி இட-ஒதுக்கீடு கோரும் விவகாரம்
த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா
இந்தியாவில் தாழ்த்தப்பட்ட முஸ்லிம்களுக்கு என தனியான இட-ஒதுக்கீடு வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கிறார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லா.
இந்தியாவில் முஸ்லிம்களுக்கான இட-ஒதுக்கீடு என்பது அனைத்துப் பிரிவு முஸ்லிம்களுக்கும் பொதுவானதாக இல்லாமல் தலித் முஸ்லிம்களுக்கானதாக இருக்க வேண்டும் என்று கோரி, அனைத்திந்திய ஐக்கிய முஸ்லிம் முன்னணி என்னும் அமைப்பு இன்று தலைநகர் தில்லியில் பேரணி நடத்தியுள்ளது.
ஆனால் தலித் முஸ்லிம்கள் என்று ஒரு பிரிவு கிடையாது என்று கூறும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள், முஸ்லிம்களுக்கு இட-ஒதுக்கீட்டின் பலன் கிடைக்கக் கூடாது என்ற நோக்கம் கொண்ட சிலரே, இவ்வாறு புதிய பிரச்சினைகளை எழுப்புவதாக குற்றஞ்சாட்டுகிறார்.
இந்திய அளவில் ஏனைய சமூகங்களை விட முஸ்லிம்கள் மிகவும் தாழ்த்தப்பட்ட நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக