சொல்ஹைமுடன் ஹக்கீம் |
வடக்கு கிழக்கு இலங்கையில் சுனாமி ஆழிப்பேரலைகளுக்கு பிறகாக நிவாரண மற்றும் மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது தொடர்பில் உருவாக்கபடுகின்ற கட்டமைப்பில் முஸ்லிம் சமூகத்தினருக்கு இடமும் பங்கும் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து சொல்ஹைமிடம் ஹக்கீம் விவாதித்துள்ளார்.
சொல்ஹைமுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட ரவூஃப் ஹக்கீம், மீள்கட்டுமானம் குறித்த விவகாரங்களில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கணிசமான அளவு ஒருங்கிணைப்பு இருப்பதாக சொல்ஹைம் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறினார்.
ஆனால் மீள்கட்டுமானம் குறித்த ஏற்பாடுகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களை முறைப்படி கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுக்க போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்பது தொடர்பில் தாங்கள் விசனமும் அதிருப்தியும் அடைந்திருப்பதை சொல்ஹைமிடம் விளக்கியதாக ஹக்கீம் தெரிவித்தார்.
தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளைப் புறக்கணித்துவிட்டு, அரசும் புலிகளும் தங்களுக்கிடையில் மட்டுமாக மீள்கட்டுமானம் குறித்து முடிவுகளை எடுப்பது விபரீதமானது என்பதை எரிக் சொல்ஹைமிடம் விளக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக