இஸ்லாம்

எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். PhotobucketPhotobucket

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

முஸ்லிம்- தமிழ் உறவு

 
தமிழ் முஸ்லிம் உறவு குறித்த கலந்துரையாடல்
மூதூரில் அகதி வாழ்க்கை
மூதூரில் அகதி வாழ்க்கை
இலங்கையின் கிழக்கே திருகோணமலையின் மூதூர் பிரதேசத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று திருகோணமலைப் படுகொலைகளுக்கும் தங்களுக்கும் சம்மந்தமில்லாத முஸ்லிம்கள் மூன்று நாட்களுக்குள் மூதூர் பகுதியினை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று எச்சரிக்கும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து அங்கு வாழும் முஸ்லிம்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழத் தாயக மீட்புப் படை என்கின்ற பெயரில் விநியோகிக்கப்பட்டுள்ள இந்தப் பிரசுரம் ஏற்படுத்தியுள்ள நிலை, மற்றும் சற்று நெருக்கடியில் இருக்கும் தமிழ் முஸ்லிம் உறவுகள் குறித்து திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் எழிலன் மற்றும், மூதூர் பிரதேச முஸ்லிம் பிரதிநிதிகளில் ஒருவரும், மஜ்லிஸ் ஷீராவின் செயலருமான எம் எம் ஜவாத் ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.
தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையே உள்ள சில பரஸ்பர சந்தேகங்கள், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு குறித்த விவகாரங்கள், திருகோணமலை வான் தாக்குதலுக்கு முஸ்லிம் தரப்பில் கண்டனம் எதுவும் தெரிவிக்கப்படாதது, முஸ்லிம் பகுதிகளில் தமிழர்கள் சிலர் கொல்லப்பட்டது போன்றவையும், இரு சமூகத்தினரும் அமைதியுடன் வாழ என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலை நேயர்கள் ஒலி வடிவில் கேட்கலாம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக